கைத்தொழில் நிகழ்வுகள் சமீப செய்திகள்
Sinhala (Sri Lanka)English (United Kingdom)

நீங்கள் இங்கே உள்ளீர்கள்: 

கைத்தொழிற் கொள்கையும் திறமுறையும்

அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைத் திட்டவமைப்பானது, நிலைபெறத்தக்க கைத்தொழில் அபிவிருத்தி, உள்ளூர்க் கைத்தொழில் மேம்பாடு ஆகியவற்றுக்கு மேல்வாரியான வழிகாட்டு நெறியையும் செயலறிவையும் வழங்குகிறது. அது, இதுகாலும் பயன்படுத்தாத உள்ளூர்ச் சந்தை வாய்ப்புக்களை பயன்படுத்த ஆரம்பித்தல், பெறுமதி சேர்ந்த உள்ளூர் மூலப்பொருள், வளங்களை அடிப்படையாகக் கொண்ட ஏற்றுமதிக் கைத்தொழில்களை மேம்படுத்துதல் என்பவற்றினூடாக அதிகரித்த வருமான உருவாக்கம், தொழில்வாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றுக்கு அழுத்தம் கொடுக்கிறது. அத்துடன் அது பிராந்தியங்களில் அதிகரித்த கைத்தொழில் முயற்சிகளை உருவாக்கும் நோக்குடன் கைத்தொழிலை பரவலாக்குவதற்கும் அழுத்தம் கொடுக்கிறது. இதன் செய்முறைக்கு உதவும் வகைக்கு அரசாங்கம், கைத்தொழிலர்கள் தொழிற்சாலைகளை கிராமப் பிரதேசங்களிற் தாபிப்பதற்கு ஆதரவுச் சேவை ஆதரவுக் கட்டமைப்புத் தேவைப்பாடுகள் ஆகியவற்றை வழங்குவதற்குத் தயாராகவே உள்ளது.

அரசாங்கத்தின் கொள்கைச் சட்டகவமைப்புக்கு இசைவுறும் வகையில், கைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சு நாட்டில் கைத்தொழில் அபிவிருத்தியை மேம்படுத்துவற்கு பல அணுகுமுறைகளைக் கைக்கொண்டுள்ளது. தெரிந்தெடுத்த செயற் பிரதேசங்களின் போட்டித் தன்மையை அதிகரித்தல்.

  • “கிராமத்துக்கு கைத்தொழில் வேலைத்திட்டங்கள்” என்னும் வேலைத்திட்டத்தினூடாக பிராந்தியங்களைக் கைத்தொழில் மயப்படுத்தல்.
  • பிராந்திய கைத்தொழில் தோட்ட அபிவிருத்தி
  • சுற்றாடலுக்கு இணக்கமான கைத்தொழில் மயப்படுத்தல்
  • கைத்தொழிற் துறையில் உற்பத்தித் திறன் மேம்படுத்தல்.
 

புதிய செய்திகள்

.

 

 

 

 

 

இறுதியாக புதுப்பிக்கப்பட்டது : 19-01-2022.
காப்புரிமை © 2022 கைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சு. முழுப் பதிப்புரிமை உடையது.