கைத்தொழில் நிகழ்வுகள் சமீப செய்திகள்
Sinhala (Sri Lanka)English (United Kingdom)

நீங்கள் இங்கே உள்ளீர்கள்: 

கைத்தொழில் துறையின் வரலாறும் முக்கிய சம்பவங்கள்

இலங்கை கைத்தொழிற் கொள்கைத் திறமுறையானது அடுத்தடுத்து ஆட்சி செய்த அரசாங்கங்களின் கருத்தியலுக்கு இணங்கவும் சருவதேய பொருளியற் சூழ்நிலைகளின் மாற்றங்களின் படியும் பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது. இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னர் எமது கைத்தொழிலின் தளம், தாராள சந்தைக் கொள்கை வேலைச் சட்டகத்தினுள் தொழிற்படும். முதனிலை ஏற்றுமதிப் பொருட் பதனிடற் கைத்தொழில்களைக் கொண்டிருந்தது. 1939 இல் இரண்டாம் உலக யுத்தம் ஆரம்பித்ததை அடுத்தும் அரசுப் பேரவைக் குழு 1947இல் சமர்ப்பித்த 73ஆம் இலக்கப் பருவப் பத்திரத்தின் வெளியீட்டைத் தொடர்ந்தும் அரசாங்கம், அரசாங்கத் துறைக்கெனப் பல அடிப்படைக் கைத்தொழில்களைத் தாபித்து ஒதுக்கீடு செய்வதன் மூலம் சற்றுக் கூடுதலான குறுக்கீட்டுக் கைத்தொழிற் கொள்கை ஒன்றைக் கைக்கொள்ளலாயிற்று. சுதந்திரத்திற்குப் பின்பான காலப்பகுதியில் அரசாங்கத துறையினால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட கைத்தொழில் அபிவிருத்தி, இறக்குமதிப் பொருட் பிரதியீட்டுக் கைத்தொழில் மயப்படுத்தல் மீது அழுத்தம் கொடுத்துத் தொடரலாயிற்று. 1960 – 1970 தசாப்த காலப்பகுதியின் போது உள்ளூர்க் கைத்தொழில்களும் பெரும் பாதுகாப்புக் கொடுக்கப்பட்டதுடன் பரந்துபட்ட ஊக்குகைகளும் வழங்கப்பட்டன. இறக்குமதிப் பொருட் பிரதியீட்டுக் கைத்தொழில் மயப்படுத்தற் கொள்கை வேலைச் சட்டகத்தினுள் ஏற்றுமதி மேம்படுத்தற் கைத்தொழில்களுக்கு ஊக்கமளிக்கப்பட்டது.

1970 இல் அரசாங்கம் உற்பத்திச் செயல்முறையில் நேரடியாகச் சம்பந்தப்பட்டதுடன் கடுமையான இறக்குமதிப் பொருட் பிரதியீட்டுக் கைத்தொழில் மயப்படுத்தற் திறமுறை ஒன்றையும் கைக்கொண்டது. அரசாங்கத்தின் கைத்தொழிற் திறமுறையானது இக் காலப்பகுதியில், மூடிய பொருளாதாரக் கொள்கையை அனுசரித்த அதேவேளையில், கைத்தொழிற் பொருள் ஏற்றுமதிகளையும் முன்னேற்ற முனைந்துள்ளது. மேலும் இந்தக் காலப்பகுதியில், 1970 இன் தொழிற் பொறுப்புக்களை (கையேற்றல்) சட்டத்தின் கீழ் தனியார் தொழில் முயற்சிகளை தேசிய மயப்படுத்தும் ஒரு கொள்கையையும் பின்பற்றியது.

1977 இல் அரசாங்கம் கைக்கொண்ட சீர்திருத்தங்கள், அரசாங்கத்தின் கைத்தொழிற் கொள்கைத் திறமுறையை பூரணமாகப் புதுப்பித்தது. கைத்தொழிற் கொள்கையானது, ஏற்றுமதித் துறையை ஒரு வளர்ச்சி எந்திரமாக குறை வைத்திருந்தது. நாட்டின் சுங்கவரிப் பட்டியல் முறைமை எளிதாக்கப்பட்டமையும் நாணயமாற்று வீதம் ஒன்றிணைக்கப்பட்டமையும் கைத்தொழிற்துறை முயற்சிகள் மீது குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

 

புதிய செய்திகள்

.

 

 

 

 

 

இறுதியாக புதுப்பிக்கப்பட்டது : 19-01-2022.
காப்புரிமை © 2022 கைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சு. முழுப் பதிப்புரிமை உடையது.