கைத்தொழில் நிகழ்வுகள் சமீப செய்திகள்
Sinhala (Sri Lanka)English (United Kingdom)

நீங்கள் இங்கே உள்ளீர்கள்: 

இரசாயன ஆயுதச் சமவாயத்தைச் செயற்படுத்தல்

இரசாயன ஆயுதங்கள் சமவாயத்தைச் செயற்படுத்டுவதற்கான தேசிய அதிகாரசபை

சர்வதேச உடன்படிக்கையான “இரசாயன ஆயுதங்கள் சமவாயம்” என்பதை இலங்கையில் நடைமுறைப் படுத்துவதற்கும் சமவாயத்தில் உள்ள குறிக்கோள்களை அடைவதற்க்காகவும் 2007 ஆம் ஆண்டு 58 ஆம் இலக்கமுள்ள இரசாயன ஆயுதங்கள் சமவாயச் சட்டம் மூலமாக கைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சின் கீழ் தாபிக்கப்பட்ட பற்ற ஒரு அதிகாரசபையாகும்.

பின்னணி

இரசாயன ஆயுதங்கள் சமவாயம் என்பது இரசாயன ஆயுதங்களின் அபிவிருத்தி, உற்பத்தி, சேமிப்பு, பயன்படுத்தல் ஆகியவற்றைத் தடை செய்வதற்காகவும் மற்றும் அவற்றை அழித்தொழிப் பதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட சர்வதேச உடன்படிக்கை ஒன்றாகும்.

இரசாயன ஆயுதங்கள் சமவாயத்தின் செயற்பாடுகளை திறம்பட செயற்படுத்துவதற் காகவும் சமவாயத்தில் உள்ள குறிக்கோள்களை அடைவதற்க்காகவும் சமவாயத்தை செயற்படுத்தும் நாடுகள் ஒன்றிணைந்து 1997 ஆம் ஆண்டு நெதர்லாந்தில் உள்ள ஹேக் நகரத்தில் இரசாயன ஆயுதங்களை செய்வதற்கான சர்வதேச அமைப்பை தாபித்துக் கொண்டுள்ளார்கள்.

இரசாயன ஆயுதங்கள் சமவாயத்தைச்  செயற்படுத்டுவதற்கான தேசிய அதிகாரசபை யின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்றுதான் , உற்பத்தி நோக்கங்களுக்காக இடர்விளையக்கூடிய இரசாயன பொருட்களைப் பயன்படுத்துகின்ற கைத்தொழில்களில் இரசாயன பாதுகாப்பு தொடர்பான மேலான நடவடிக்கைகலை மேம்படுத்துவதும்  விருத்தியடையச் செய்வதுமாகும். பாதுகாப்பு முகாமைத்துவம் தொடர்பான பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ள இரசாயனக் கைத்தொழிலாலார்களுக்கான கருத்தரங்குகளை ஏற்பாடு செய்வதன் மூலம் இது அடயப்படுகின்றது. இது பொதுமக்களுக்கு மறைகுகமான அனுகூலத்தினை வழங்குகின்றது

அதிகாரசபையின் பணிகளும் சேவைகளும்

 • அட்டவணைப் படுத்தப்பட்ட இரசாயனப் பொருட்கள் கையாளுகின்றவர்களை பதிவு செய்தல்.
 • அட்டவணைப் படுத்தப்பட்ட இரசாயனப் பொருட்கள் ஏற்றுமதி/இறக்குமதி செய்வதற்கு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களத்துக்கு அவசியமான சிபாரிசு வழங்குதல்.
 • இரசாயனப் பொருட்களினால் ஏற்படும் விபத்துகளின் / தாக்குதல்களின் போது பொறுப்புக்கூற வேண்டிய அமைப்புகளுக்கு ஒத்துழைப்பு வழங்குதல்.
 • கைத்தொழிலாளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
 • இடையூருமிக்க இரசாயனப் பொருட்களை கையாளுகின்றவர்களுக்கு பயிற்சியளித்தல்.
 • சமவாயத்தைச் செயற்படுத்துவதற்கு வசதிகளை ஏற்படுத்தும் வகையில் புதிய சட்டவாக்கத்தைச் சட்டமாக்குதல்.
 • இரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்புடனும் ஏனைய அரச தரப்புகளுடனும் பயனுறுதி வாய்ந்த இணைப்பை ஏற்படுத்துவதற்கான தேசிய குவி முனையாகச் செயற்படுவது.
 • அட்டவனைப்படுத்தப்பட்ட இரசாயனப் பொருள்களும் அவற்றின் முன்னோடிகளும் சமாதான நோக்கங்களுக்கு மட்டும் பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளைக் கைக்கொள்வது.
 • அட்டவணைப்படுத்தப்பட்ட இரசாயன பொருட்கள் இறக்குமதி செய்யும் தரவுகள் பெற்றுக்கொள்ளுதல், பகுத்தல் மற்றும் இரசாயன பொருட்கள் பயன்படுத்தும் இடங்கள் பரீட்சிப்பது.
 • இரசாயனப் பொருட்களால் ஏற்படும்  அவசரநிலை தொடர்பில் தேசிய பாதுகாப்பு திட்டமொன்றை மேம் படுத்துவதற்காக உதவி புரிதல்.
 • இரசாயனப் பொருட்களால் ஏற்படும்  அவசர நிலைக்கு முகம் கொடுப்பதற்காக   தயார் நிலையை விருத்தி செய்வதற்கும் மருத்துவ முகாமையை விருத்தி செய்வதற்கும் உதவி புரிதல்.

தொடர்பு விபரங்கள்

பணிப்பாளர்            கலாநிதி ரொஹான் பி பெரேரா , MS, PhD(USA)
முகவரி இரசாயன ஆயுதச் சமவாயத்தைச் செயற்படுத்தும் அதிகாரசபை
கைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சு,
இல. 73/1, காலி வீதி, கொழும்பு 03.
தொ.பேசி. +94-11-2327807
தொ.நகல் +94-11-2332443
மி.அஞ்சல் This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
இணைய தளம் www.nacwc.gov.lk

தரவிறக்கம்

பதிவு செய்வதற்கான விண்ணப்பப் படிவம் - CWC

பதிவுக்கான திருத்தம் செய்வதற்கான விண்ணப்பப் படிவம் - CWC

எதிர்நோக்கப்பட்ட செயற்பாடுகள் பற்றிய விபரங்களுக்கான விண்ணப்பப் படிவம் - CWC

கடந்தகாலச் செயற்பாடுகள் பற்றிய விபரங்களுக்கான விண்ணப்பப் படிவம் - CWC

இரசாயன ஆயுதங்கள் சமவாயச் சட்டம்

ஒழுங்கு விதிகள்

அட்டவணைப்படுத்தப்பட்ட இரசாயனப் பொருட்கள்

இரசாயன ஆயுதச் சமவாயத்தைச் செயற்படுத்தும் அதிகாரசபை

இணைய தளம்
 

புதிய செய்திகள்

.

 

 

 

 

 

இறுதியாக புதுப்பிக்கப்பட்டது : 19-01-2022.
காப்புரிமை © 2022 கைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சு. முழுப் பதிப்புரிமை உடையது.