கைத்தொழில் நிகழ்வுகள் சமீப செய்திகள்
Sinhala (Sri Lanka)English (United Kingdom)

நீங்கள் இங்கே உள்ளீர்கள்: 

கைத்தொழிற் தரவுகளை பரப்புதல்

எமது வாடிக்கையாளர்கள் கைத்தொழில் துறையில் உள்ள மிக முக்கிய தகவல்களை நவீன IT வசதிகளுடன் இலகுவில் பெற்றுக் கொள்வதற்கு ஏற்பாடுகளைச் செய்வது அமைச்சின் முதனிலைக் குறிக்கோள்களில் ஒன்றாக விளங்குகிறது. இலங்கையில் கைத்தொழிலுடன் தொடர்புற்று தகவல்களில் விசேட அக்கறை கொண்ட பிரதான அமைப்புகளில் ஒன்றாக எமது அமைச்சு விளங்குவதால், நாம் கைத்தொழிற் புள்ளி விபரங்கள் பற்றிய சில அகல் விரிவான தரவுத் தளங்களைப் பேணி வருகிறோம். இந்தச் செய்முறையில் நாம் அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்ட கைத்தொழில்கள் அனைத்திலிருந்தும் உற்பத்தி விபரங்களைப் பெற்றுக் கொள்வதற்கும் ஆண்டு உற்பத்தி விபரங்கள் பற்றிய தரவுத் தளம் ஒன்றைப் பேணுவதற்கும் ஆண்டுத் திரட்டுப் படிவத்தை அனுப்புவதன் மூலம் ஆண்டு ஆய்வுகளை நடாத்தி வருகிறோம். மேலும் நாம், பதிவு பெற்ற கைத்தொழில்கள் பற்றிய இன்னொரு தரவுத் தளத்தை, அமைவிடம், தொடர்பு விபரங்கள், உற்பத்திப் பொருள்கள் போன்ற அவற்றின் அடிப்படைத் தகவல்களுடன் பேணி வருகிறோம். இந்தத் தகவல்களை, தரப்பட்ட ஒரு காலப் பகுதியினுள் புவியியல் இடவமைவு, துறை, உற்பத்திப் பொருள்கள் வாரியாக இணையத்தினூடாக ஓய்வு நேரங்களில் வாசித்து அறிந்து கொள்ள முடியும்.

இந்த ஆய்வின் கீழ் நாம், வெளியீடுகளின் பெறுமதி, தொகையளவு, உற்பத்தித் திறன், ஏற்றுமதி, உள்ளூர் விற்பனைகளின் பெறுமதி, விற்பனைத் தொகை, பயன்படுத்திய உள்ளூர் இறக்குமதி செய்த மூலப் பொருள்களின் பெறுமதி, பயன்படுத்திய மின்சாரம், எரிபொருள் பணியாளரின் எண்ணிக்கை கூலி போன்றவற்றின் ஆண்டு அடிப்படையிலான விபரங்களை சேகரிக்கிறோம். இத்தகவல்கள் மாவட்ட, பிரதேச செயலக மட்டத்தில் மொத்தத் திரட்டு உருவில் ISIC (சருவதேய நியமக் கைத்தொழில் வகுப்பீடு) வாரியாகக் கிடைக்கக் கூடியனவாக உள்ளன.

 

புதிய செய்திகள்

.

 

 

 

 

 

இறுதியாக புதுப்பிக்கப்பட்டது : 19-01-2022.
காப்புரிமை © 2022 கைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சு. முழுப் பதிப்புரிமை உடையது.