கைத்தொழில் நிகழ்வுகள் சமீப செய்திகள்
Sinhala (Sri Lanka)English (United Kingdom)

நீங்கள் இங்கே உள்ளீர்கள்: 

கைத்தொழில்களைப் பதிவு செய்தல்

இந்த அமைச்சின் பிரதான முயற்சிகளில் ஒன்று, 1990 இன் 46ஆம் இலக்க கைத்தொழில் மேம்படுத்தல் சட்டத்தின் கீழ் கைத்தொழில்களைப் பதிவு செய்வதாகும். முதலீட்டுச் சபையின் கீழான கைத்தொழில் தவிர, சட்டத்தில் குறித்துரைக்கப்பட்ட பின்வரும் வகுதிகளின் கீழான கைத்தொழிற் பொறுப்பு ஒன்றை மேற்கொள்ளும் ஒவ்வொரு ஆளும் அத்தகைய கைத்தொழிற் பொறுப்பு மேற்கொள்ளப்படும் அமைவிடம் அல்லது இடத்தினை பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும்.

  • வெளிநாட்டு முதலீட்டுடனான ஏதாவது கைத்தொழில்.
  • உயர் தொழில்நுட்பவியலைப் பயன்படுத்தும் ஏதாவது கைத்தொழில்.
  • இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்வதற்காக பொருள்களை உற்பத்தி செய்யும் ஏதாவது கைத்தொழில்.
  • கனிசப் பொருள்களை அல்லது புதுப்பிக்கவியலர இயற்கை வளங்களை அகழ்வாய்வு செய்யும் அகழந்தெடுக்கும் அல்லது பதனிடும் ஏதாவது கைத்தொழில்.
  • படைக்கல, வெடிமருந்து, வெடிபொருள், இராணுவ வாகனங்கள், உபகரணங்கள், வானூர்திகள் ஆகியவற்றையும் பிற இராணுவ வன்பொருள்களையும் உற்பத்தி செய்யும் ஏதாவது கைத்தொழில்.
  • நஞ்சு, திகைப்பு மருந்துகள், அற்ககோல், போதை மருந்து ஆகியவற்றையும் நச்சுப் பொருள்கள், ஆபத்தான பொருள்கள், புற்றுநோய் உண்டுபண்ணும் பொருள்கள் போன்றவற்றையும் உற்பத்தி செய்யும் ஏதாவது கைத்தொழில்.
  • நாணயத் தாள், நாணயக் குற்றி, பாதுகாப்பு ஆவணம் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் ஏதவாது கைத்தொழில்.

இவற்றுடன் :

  • பொறித்தொகுதி, உபகரணங்களில் மூலதன முதலீட்டின் பெறுமதி நான்கு மில்லியன் ரூபாயை விஞ்சுகின்ற. அத்துடன்,
  • ஏதாவது கைத்தொழில் அத்தகைய கைத்தொழிலில் நிரந்தர பணியாளர்களின் எண்ணிக்கை ஐம்பதை விஞ்சுகின்ற,
  • அரசாங்கத்துக்குச் சொந்தமான அல்லது அரசாங்கம் அதிகப்படியான பங்குகளை வைத்திருக்கும் கம்பனி ஒன்றுக்குச் சொந்தமான ஏதாவது கைத்தொழில்.


கைத்தொழில் மேம்படுத்தல் சட்டத்தில் குறித்துரைத்த மேலே குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளுக்கு மேலதிகமாக, அரசாங்கமும் ஏனைய அமைப்புக்களும் செயற்படுத்தும் பல்வேறு நியதிகள், நிபந்தனைகள் பற்றிய அதாவது கைத்தொழில்களைப் பதிவு செய்கையில் எழுப்பப்படும் சுற்றாடல் முயற்சி விடயங்கள் போன்றவை பற்றிய, அக்கறைகளை பெற விரும்பினால், எமது இணையத் தளத்தில் இயைபுடைய அமைப்புகளில் ஏலவே செய்யப்பட்ட இணைப்புகளினூடாக அல்லது MIS பகுதியுடன் தொடர்பு கொள்வதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். அமைச்சு, திருப்திப்படுத்திய விண்ணப்பகாரருக்கு பிரதான உற்பத்திப் பொருள்கள், அமைவிடம், முகவரி போன்ற விபரங்கள் அடங்கலாக, தனித்துவமான பதிவு இலக்கம் ஒன்றுடன் சான்றிதழ் ஒன்றை வழங்கும்.

இந்தப் பதிவு, வாய்ப்புள்ள வாடிக்கையாளர்கள், தொழிற்பங்காளிகளிடையே நம்பத்தகு தன்மையைக் கட்டி எழுப்புவதற்கான அத்திவாரமாக அமையும். மேலும் இப்பதிவு அரசாங்கம் உங்களது வாணிபத்தை உயர்த்துவதற்கு வசதிகளை ஏற்படுத்தி காலத்துக்குக் காலம் அறிமுகப்படுத்தும். எவையேனும் சில ஊக்குகைத் திட்டங்களின் கீழ் எவையேனும் பிற திட்டங்களின் கீழ் நீங்கள் பல்வேறு வசதிகளைப் பெறுவதற்கு விரும்பனால், முக்கியமானதாக இருக்கும். அத்துடன் இப்பதிவு, தற்போதுள்ள கைத்தொழிலின் நல்ல அமைப்பை விருத்தி செய்வதற்கும் சந்தர்ப்பத்தை வழங்கும். இது தன் பங்கில் கைத்தொழிற்றுறையின் நடப்பு நிலை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் எதிர்காலத்தில் தகுந்த திறமுறைகளைச் செயற்படுத்துவதற்குரிய சரியான கொள்கைத் தீர்மானத்தை எடுப்பதற்கும் கைத்தொழிலின் புள்ளி விபரங்கள் பற்றிய அகல்விரிவான தரவுத் தளம் ஒன்றை நாங்கள் கட்டி எழுப்புவதற்கும் எங்களுக்கு உதவும்.

 

புதிய செய்திகள்

.

 

 

 

 

 

இறுதியாக புதுப்பிக்கப்பட்டது : 19-01-2022.
காப்புரிமை © 2022 கைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சு. முழுப் பதிப்புரிமை உடையது.