கைத்தொழில் நிகழ்வுகள் சமீப செய்திகள்
Sinhala (Sri Lanka)English (United Kingdom)

நீங்கள் இங்கே உள்ளீர்கள்: 

உற்பத்தித் திறன் மேம்படுத்தல் நிகழ்ச்சித் திட்டம்

பிரதான பணிகள்

அமைச்சுக்கு ISO 9001 - 2000 சான்றிதழைப் பெறுதல்.

கைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சில் தர முகாமை முறைமை ஒன்றை விருத்தி செய்வதற்காக அமைச்சு ISO 9001 – 2000 சான்றிதழைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அது, கைத்தொழில் துறையில் முதலீடு செய்வதற்கு அல்லது தற்போதுள்ள தமது கைத்தொழிலில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அமைச்சுக்கு விஜயஞ் செய்யும் முதலீட்டாளர்களுக்கு மகிழ்வளிக்கும் சூழ்நிலையை உருவாக்குதவதற்கு மிக முக்கியமானது.

கைத்தொழில் துறையில் உற்பத்தித் திறன் மேம்படுத்தல் நிகழ்ச்சித் திட்டத்தைச் செயற்படுத்துதல்.

உற்பத்தித் திறன் மேம்படுத்தல் நிகழ்ச்சித் திட்டமானது, உற்பத்தி செய்யும் கைத்தொழிலதிபரை உற்பத்தித் திறனை அதிகரிப்பதன் மூலம் உலக சந்தையில் போட்டித்தன்மையை எதிர்கொண்டு நிலைபெறச் செய்வதற்கு தயார்படுத்துவது மிக முக்கியமானது. அது, சராசரி உற்பத்திச் செலவைக் குறைப்பதன் மூலம் இலாப அளவை உச்சப்படுத்துவதற்கு கைத்தொழில்களுக்கு உதவுகிறது. இந்த நிகழ்ச்சித் திட்டங்கள் உள்ளூர்க் கைத்தொழில்கள் சருவதேய வாங்குநர்களிடையே அங்கீகாரம் பெறுவதற்கும் உதவுகின்றன.

இந்த உண்மை நிலைகளைப் பரிசீலனை செய்து கைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சு ஒரு முன்னோடி நிகழ்ச்சித் திட்டமாக பத்துத் தொழிற்சாலைகளில் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை ஆரம்பித்தள்ளது. பின்னர் அது விரிவுபடுத்தப்படும். இந்தப் பத்துத் தொழிற்சாலைகளில் மூன்று தொழிற்சாலைகள், நிகழ்ச்சித் திட்டத்தின் இறுதியில் தர விருதினை, வென்றெடுப்பதற்கு இலக்குக் குறிக்கப்பட்டன. மேலும் உள்ளூர்க் கைத்தொழில்கள் தர முகாமை முறைமையைக் கைக்கொள்வதற்கு அவற்றை ஊக்குவிப்பதற்கு இத்தொழிற்சாலைகள் ஏனைய தொழிற்சாலைகளுக்கு மாதிரிச் செயன்முறைகாட்டு தொழிற்சாலைகளாகவும் விளங்கவுள்ளன.

இது தொடர்பில் இந்த அமைச்சு வெகு சீக்கிரத்தில் பெரிய, நடுத்தர, சிறிய அளவிலான கைத்தொழில்களிலிருந்து விண்ணப்பங்களைக் கோரவுள்ளது. முப்பது கம்பனிகள் ஒரு தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்துக்குத் தெரிவு செய்யப்படும். இறுதியில் பத்துக் கம்பனிகள் சான்றிதழ்கள் வழங்குவதற்காகத் தெரிவு செய்யப்படும். இந்தத் தெரிவு, தெரிவுத் தகுதிறனின் மீது செய்யப்படும். இக்கம்பனிகளின் முகாமையும் பணியாளர்களும் மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளனர்.

 

புதிய செய்திகள்

.

 

 

 

 

 

இறுதியாக புதுப்பிக்கப்பட்டது : 19-01-2022.
காப்புரிமை © 2022 கைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சு. முழுப் பதிப்புரிமை உடையது.