கைத்தொழில் நிகழ்வுகள் சமீப செய்திகள்
Sinhala (Sri Lanka)English (United Kingdom)

நீங்கள் இங்கே உள்ளீர்கள்: 

வணிக, விலைப்பட்டியல் தொடர்புற்ற முயற்சிகள்

பெருங் கொள்கைப் பகுதி முதனிலையாக கைத்தொழில் அபிவிருத்திக்கு கொள்கை ஆதரவு வழங்குவதில் ஈடுபட்டுள்ளது. கைத்தொழிலின் வளர்ச்சி, சருவதேயப் போட்டித் தன்மை ஆகியவற்றுக்கு விசேட கவனஞ் செலுத்தப்படுகிறது. இப்பணிகளைப் புரிகையில் அமைச்சு அரசாங்கத்துறை அமைப்புகளுடனும் இருதரப்பு, பல்தரப்பு முகாமைகளுடனும் இடைத் தொடர்பு மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. இ/து உயர்ந்தவொரு சிக்கலான செயன்முறை. இதற்குத் தொடர்ச்சியான கண்காணிப்பும் கைத்தொழிலில் உள்ள பல்வேறு அக்கறை நபர்களுடன் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டியும் உள்ளது. உற்பத்தித் துறையின் வளர்ச்சிக்கு உகந்த நிலையான, எதிர்வு கூறத்தக்க பெரும் பொருளாதாரச் சூழல் ஒன்றைப் பேண வேண்டிய தேவையைக் கருத்திற் கொண்டு, இப்பகுதி பின்வரும் துறைகளில் அதன் பெருங் கொள்கை ஆதரவுக்கு முன்னுரிமை வழங்கியுள்ளது.

விலைப்பட்டியற் கொள்கை தொடர்புற்ற விடயங்கள்

இந்தப் பகுதியின் பிரதான பணிகளுள் ஒன்று பல்வேறு கைத்தொழிலர்கள், வர்த்தக குழுமத்தினர், கைத்தொழில், வாணிபச் சங்கங்கள் எழுப்பும் சுங்கவரி முரண்பாடுகளை/விடயங்களை அகற்றுவதில்/குறைப்பதில் தீவிரமாகப் பங்குபற்றுவதாகும். அவ்வேண்டுகோள்களின் பூரணமான மதிப்பீடு ஒன்று ஆய்வுகள், நுண்ணாய்வுகளினூடாக மேற்கொள்ளப்படுவதுடன் விதப்புரைகள், பொருளாதார அபிவிருத்திக்கான தேசிய மன்றத்தின் (NCED) வாணிப, சுங்கவரி கொத்தமைப்புக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்தச் செய்முறையில் பெறுமதி சேர்ப்பு, வருவாய், உட்கிடைகள் பற்றிய அகல்விரிவான ஆய்வுகளும் அடங்குகின்றன.

கைத்தொழிலர்கள் சமர்ப்பிக்கும் முரண்பாடுகள் வேண்டுகோள்களைக் கவனிப்பதற்கு மேலதிகமாக, இந்தப் பகுதி நடுத்தரக் கால நீண்ட கால சுங்க வரியை உத்தேசிக்கையில் இயைபுடைய அதிகாரிகளுக்கு உதவுவதிலும் சம்பந்தப்பட்டுள்ளது.

இதற்கு இணங்க, தற்போது நிகழ்வில் உள்ள மேல்வாரியான சுங்கவரிக் கொள்கை வேலைச் சட்டகம் ஐந்து பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவை :
0%  - அத்தியாவசியப் பொருள்கள், மூலப் பொருள்கள்.
2.5%  - அடிப்படைக் கைத்தொழில் மூலப்பொருள்கள், பொறிச் சாசனம்
6%  - ஓரளவு பதனிட்ட மூலப் பொருள்கள்
15% - இடைநிலை இடுகைகள் (உள்ளூர் உற்பத்தித் தளத்துடன் கூடிய பதனிட்ட மூலப் பொருள்கள்)
28%  - செய்து முடித்த பொருள்கள்

சருவதேய வாணிபத்தை மேம்படுத்துதல்

வாணிபக் கொள்கை, கைத்தொழிற் கொள்கைகளுக்கிடையில் வலுவான பிணைப்பு இருப்பதன் காரணமாக, இப்பகுதி, நாட்டின் கைத்தொழில் துறையின் நலன் பொருட்டு முட்டற்ற வர்த்தக உடன்படிக்கைகளை உச்ச அளவிற் பயன்படுத்துவதற்கான வாணிப, வர்த்தக, நுகர்வோர் அலுவல் அமைச்சுடன் சேர்ந்து உயிர்ப்புள்ள பங்களிப்பைச் செய்து வருகிறது. உள்ளூர்க் கைத்தொழிற் துறையினர் இருதரப்பு, பல்தரப்பு உடன்படிக்கைகளினூடாக ஏற்றுமதிச் சந்தையினுள் ஊடுருவதற்கு அவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது பிரதான குறிக்கோளாகும்.

நாடு கைச்சாத்திட்ட வர்த்தக உடன்படிக்கைகள்

  • இந்திய - இலங்கை முட்டற்ற வர்த்தக உடன்படிக்கை. (ISFTA)
  • பாக்கிஸ்தான - இலங்கை முட்டற்ற வர்த்தக உடன்படிக்கை (PSFTA)
  • EU – GSP + திட்டம்
 

புதிய செய்திகள்

.

 

 

 

 

 

இறுதியாக புதுப்பிக்கப்பட்டது : 19-01-2022.
காப்புரிமை © 2022 கைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சு. முழுப் பதிப்புரிமை உடையது.