உள்ளகக் கணக்காய்வூப் பிரிவூ

தலைமை உள்ளகக் கணக்காய்வாள

பி.கே.எம்.ஜே. ரொந்திரிகோ
தலைமை உள்ளகக் கணக்காய்வாள

தொலைபேசி : +94-11-2435847
உள்ளக: 366
கையடக்க : 071 – 4557999 / 0777958248
உள்ளகக் கணக்காய்வூப் பிரிவூ : 220
தொலைநகல் : +94-11–2435847
மின்னஞ்சல் முகவரி: bkm.jenita@gmail.com

முக்கிய செயல்பாடுகள்

உளளகக் கணக்காய்வூப் பிரிவூ என்பது நிதி மற்றும் கணக்கு நடவடிக்கைகள் தவிர அமைச்சின் செயல்பாடுகளுக்கு வெளியே அமைந்துள்ள அமைச்சின் செயலாளரின் கீழ் அமைக்கப்பட்ட ஒரு சுயாதீனமான பிரிவாகும். இந்த பிரிவூ தலைமை உள்ளகக் கணக்காய்வாளரின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுகிறது.

தேசிய கணக்காய்வூச் சட்டத்தின் பிரிவூ 4 ன் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் மற்றும் நிதி பிரமாணங்கள்; 133இ134 இன் பிரகாரம் உள்ளகக் கணக்காய்வூப் பிரிவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்றும் தேசிய கணக்காய்வூச்; சட்டத்தின் 38 (ஆ) மற்றும் (ஊ) இல் காட்டப்பட்டுள்ளவாறு தலைமை கணக்கீட்டு உத்தியோகத்தரின்; பொறுப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்யூம் பொருட்டு முகாமைத்துவ கணக்காய்வூத் திணைக்களத்தினால் அவ்வப்போது வெளியிடப்படும் சுற்றறிக்கைகளின் விதிகளின்படி கணக்காய்வூ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

கைத்தொழில் அமைச்சு மற்றும் கைத்தொழில் அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமைகளை ஆய்வூ செய்வதற்கும் அந்த அமைப்புகளில் பிழைகள் மற்றும் மோசடிகளைத் தடுப்பதற்கும் கண்டறிவதற்கும் மேற்கொள்ளப்படும் உள்ளக பரீசலனைகளின் முறைமை மற்றும் போதுமான தன்மை பற்றிய தொடர்ச்சியான ஆய்வூகள் மற்றும்; சுயாதீன கணிப்பீடு செய்வதும்இ அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களினால் செயல்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் திட்ட முறைகளை செயல்படுத்துதல் மற்றும் திட்டங்களையூம் நிகழ்ச்சித் திட்டங்களையூம் செயல்படுத்துவதில் ஏற்பட்ட முன்னேற்றத்தை தீர்மானிக்க தலைமை கணக்கீட்டு அலுவலர் மற்றும் முன்னேற்ற கண்காணிப்பு குழுவூக்கு ஒத்துழைப்பு வழங்குவதும்இ அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்கள் தொடHபாக தேவையான சந்தHப்பங்களில் சிறப்பு விசாரணைகளை நடத்துவதும் முக்கிய பணியாகும்.

 

  உள்ளக கணக்காய்வுப் பிரிவு

உள்ளக கணக்காய்வுப் பிரிவு என்பது,  அமைச்சின் விடயப்பரப்புக்குப் புறம்பாக நிதி மற்றும் கணக்கு விவகாரங்களைக் கொண்டுள்ள அமைச்சின்  செயலாளரின் கீழ் உள்ள ஒரு சுயாதீனமான பிரிவாகும். இந்தப் பிரிவு தலைமை உள்ளக கணக்காய்வாளரின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டலின் கீழ் செயல்படுகிறது.

தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 40 ஆம் பிரிவு மற்றும் நிதி ஒழுங்கு விதிகள் 133 மற்றும் 134 இன் கீழ் மேற்கொள்ளப்பட்ட நியமனத்தின் பிரகாரம் போன்றே  முகாமைத்துவத் திணைக்களத்தின் 2019.01.12 தேதியிடப்பட்ட 01/2019  ஆம் இலக்க சுற்றறிக்கை ஏற்பாடுகளுக்கமைய  தேசிய கணக்காய்வுச் சட்டத்தின்  38(b) மற்றும்  (f) இன் கீழ்  குறிப்பிடப்பட்டுள்ள பிரகாரம்  தலைமை கணக்கீட்டு உத்தியோகத்தரின் செயலாற்றுகையை சான்றளிப்பதற்கு உள்ளக கணக்காய்வுப் பிரிவுக்கு அதிகாரம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உள்ளக கணக்காய்வுப் பிரிவின் விடயப் பரப்பு

உள்ளக கணக்காய்வின் விடயப் பரப்பானது ஆபத்துக்கள் முகாமைத்துவம், நடைமுறைகள், உள்ளக கட்டுப்பாட்டு முறைமைகள்தகவல் முறைமைகள் மற்றும் கட்டுப்பாட்டு செயல்முறைகளின் மதிப்பாய்வு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். அமைச்சு மற்றும் கைத்தொழில் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களில் மேற்கொள்ளப்படுகின்ற மோசடிகளைத் தடுக்கவும் கண்டறியவும் உதவுகின்ற  கொடுக்கல்வாங்கல்கள், விசேட விசாரணைகள் மற்றும் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் சோதனைகள்  ஆகியவையும் இதில் அடங்கும்.

உள்ளக கணக்காய்வுப் பிரிவின் பிரதான நோக்கங்கள்

  • அமைச்சு மற்றும் நிறுவனங்களின் உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமைகளை சோதனை செய்தல் மற்றும் அந்த  முறைமைகளில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத்திக்கொள்வதற்கும், தடுப்பதற்கும் மேற்கொள்ளப்படும் உள்ளக சோதனைகளின்  பொருத்தப்பாடு மற்றும் போதுமான தன்மை குறித்து தொடர்ச்சியான சோதனைகள் மற்றும் சுயாதீன மதிப்பீடுகளை நடத்துதல்.
  • அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்களால் செயற்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் முன்மொழிவுகளின் திட்டமிடல் மற்றும் செயற்படுத்தலின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கு தலைமை நிதி அலுவலருக்கு மற்றும் முன்னேற்ற மதிப்பாய்வுக் குழுவுக்கு உதவுதல்.
  • இந்தப் திட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்கள், அமைச்சின் செயலாளர் மற்றும் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டங்களின் சம இணைப்பாளர்களாக நடவடிக்கை மேற்கொள்ளல்.