கருத்திட்ட முகாமைத்துவப் பிரிவு

சிறிய மற்றும் நடுத்தர  தொழில் முயற்சியாளர்களை நிதி ரீதியில் வலுவூட்டுவதனூடாக சமநிலையான கைத்தொழில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு பங்களிக்கும் நோக்கத்துடன் கைத்தொழில் அமைச்சின் கீழ் நிறுவப்பட்ட இந்தக் கருத்திட்ட முகாமைத்துவப் பிரிவினால் பங்கேற்பு கடன் வழங்கும் நிறுவனங்கள் ஊடாக பின்வரும் 2 கடன் திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன.

1. SMILE III – RF கடன் திட்டம்

தற்போதைய செயலாற்றுகை (2013 – 2023 ஒக்தோபர்)

கடன் வழங்கப்பட்டுள்ள கருத்திட்டங்களின் எண்ணிக்கை 3,410

வழங்கப்பட்டுள்ள மொத்தக் கடன் தொகை –16.89 பில்லியன் ரூபா

கடன் வகைஉச்சளவு கடன் தொகை (ரூ.)வட்டி வீதம்மீளச் செலுத்தும் காலம் (வருடங்கள்)
சாதாரண கடன் திட்டம்25 மில்லியன்8%10 (2 வருட சலுகைக் காலம் உட்பட)
தொழில்நுட்ப பரிமாற்றல் உதவிக் கடன் திட்டம்2.5 மில்லியன்5%7 (2 வருட சலுகைக் காலம் உட்பட)

சாதாரண கடன் திட்டம்

இதனூடாக உற்பத்திக் கைத்தொழில்களில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்களில் இயந்திர சாதனங்கள் மற்றும் கருத்திட்ட செயற்பாட்டு  அறிவுறுத்தல்கள் ஊடாக அறிமுகஞ் செய்யப்பட்டுள்ள விதத்தில் தொழிற்பாட்டு மூலதன தேவைப்பாடுகளுக்காக கடன்கள் வழங்கப்படுகின்றன.

தொழில்நுட்ப பரிமாற்றல் உதவிக் கடன் திட்டம்

இதனூடாக உற்பத்திக் கைத்தொழில்களில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்களில் கருத்திட்ட செயற்பாட்டு  அறிவுறுத்தல்கள் ஊடாக அறிமுகஞ் செய்யப்பட்டுள்ள விதத்தில் தொழில்நுட்ப பரிமாற்றல் முறைகளுக்கான கடன்கள் வழங்கப்படுகின்றன.

பங்கேற்பு கடன் வழங்கும் நிறுவனங்கள் (PCI)

  1. இலங்கை வங்கி
  2. மக்கள் வங்க
  3. பிரதேச அபிவிருத்தி வங்கி (RDB
  4. தேசிய அபிவிருத்தி  வங்கி (NDB)
  5. DFCC வங்கி (DFCC)
  6. சம்பத் வங்கி
  7. செலான்  வங்கி
  8. ஹற்றன் நெஷனல் வங்கி (HNB)
  9. கொமர்ஷல் வங்கி
  10. சணச அபிவிருத்தி வங்கி (SDB)

மேலதிக விபரங்களுக்கு:

https://www.industry.gov.lk/web/wp-content/uploads/2022/08/smile-leaflet.pdf

கடன் விண்ணப்பப் படிவம் (சாதாரண கடன் திட்டம்)

SMILE III சுழற்சி நிதியத்தின் கீழ் கடன் வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணபப்படிவம் (சாதாரண கடன்)

கடன் விண்ணப்பப் படிவம் (தொழில்நுட்ப பரிமாற்றல் உதவிக் கடன் திட்டம்)

SMILE III சுழற்சி நிதியத்தின் கீழ் கடன் வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணபப்படிவம்(தொழில்நுட்ப உதவி)

2. E-Friends II – RF கடன் திட்டம்

தற்போதைய செயலாற்றுகை (2018 – 2023 ஒக்தோபர்)

கடன் வழங்கப்பட்டுள்ள கருத்திட்டங்களின் எண்ணிக்கை 138

வழங்கப்பட்டுள்ள மொத்தக் கடன் தொகை –1.52 பில்லியன் ரூபா.

கடன் வகைஉச்சளவு கடன் தொகை (ரூ.)வட்டி வீதம்மீளச் செலுத்தும் காலம் (வருடங்கள்)
சாதாரண கடன் திட்டம்30 மில்லியன்6.5%10 (2 வருட சலுகைக் காலம் உட்பட)
தொழில்நுட்ப பரிமாற்றல் உதவிக் கடன் திட்டம்1 மில்லியன்2%(2 வருட சலுகைக் காலம் உட்பட)

சாதாரண கடன் திட்டம்

இதன் கீழ் கைத்தொழிற்சாலைகளில் இருந்து சுற்றுச்சூழலுக்கு வெளியிடப்படும் அனைத்து விதத்திலான சுற்றுச்சூழல் மாசுபாடுகளையும் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத விதத்தில் மீள்சுழற்சி செய்வதற்கான கருத்திட்ட செயற்பாட்டு அறிவுறுத்தல்கள் ஊடாக  அறிமுகப்படுத்தப்பட்ட விதத்திலான இயந்திர சாதனங்கள் மற்றும் கட்டுமானங்களுக்கான கடன் வசதிகள் வழங்கப்படுகின்றன.

தொழில்நுட்ப பரிமாற்றல் உதவிக் கடன் திட்டம்

மேற்கூறப்பட்ட சாதாரண கடன் திட்டத்தின் கீழ், கடன் வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கான தகைமைகளைப் பெற்றுக்கொள்ளும் கைத்தொழில்களுக்கு கடன் வசதிகளின் ஊடாக முன்மொழியப்பட்ட அபிவிருத்தி  நடவடிக்கைகளுக்காக கருத்திட்ட செயற்பாட்டு அறிவுறுத்தல்கள் ஊடாக  அறிமுகப்படுத்தப்பட்ட விதத்திலான தொழில்நுட்ப உதவி முறைகளுக்காக கடன் வசதிகள் இதன் கீழ் வழங்கப்படுகின்றன.

பங்கேற்பு கடன் வழங்கும் நிறுவனங்கள் (PCI)

  1. இலங்கை வங்கி
  2. மக்கள் வங்கி
  3. பிரதேச அபிவிருத்தி வங்கி (RDB)
  4. தேசிய அபிவிருத்தி  வங்கி (NDB)
  5. DFCC வங்கி (DFCC)
  6. சம்பத் வங்கி
  7. செலான்  வங்கி
  8. ஹற்றன் நெஷனல் வங்கி (HNB)
  9. கொமர்ஷல் வங்கி
  10. லங்கா ஒரிக்ஸ் லீசிங் பினேன்ஸ் (LOLC)
  11. பீபல்ஸ் லீசிங் என்ட் பினேன்ஸ் பீஎல்சீ

மேலதிக விபரங்களுக்கு:

https://www.industry.gov.lk/web/wp-content/uploads/2022/08/E-Friend-Leaflet.pdf

கடன் விண்ணப்பப் படிவம் (சாதாரண கடன் திட்டம்)

E Friends II சுழற்சி நிதியத்தின் கீழ் கடன் வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணபப்படிவம் (சாதாரண கடன்) 

கடன் விண்ணப்பப் படிவம் (தொழில்நுட்ப பரிமாற்றல் உதவிக் கடன் திட்டம்)

E Friends II சுழற்சி நிதியத்தின் கீழ் கடன் வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணபப்படிவம் (தொழில்நுட்ப உதவி)

      ஒருங்கிணைப்பு        தகவல்கள்

பெயர்

பதவி

தொலைபேசி

தொலைநகல் / மின்னஞ்சல்

திருமதி திலக்கா ஜயசுந்தர

கருத்திட்டப் பணிப்பாளர்

+94 11 243 6 123/4

+94 11 244 9 402

pmu@industry.gov.lk
pmu116mic@gmail.com

திரு.கே.எம்.ரிஸ்வி

பிரதி கருத்திட்டப் பணிப்பாளர்

+9411232 9 722

+94 11 243 6 662

pmu@industry.gov.lk
pmu116mic@gmail.com

திரு. எஸ்.எச்.பெர்னாந்து

கருத்திட்ட நிதி முகாமையாளர்

+9411232 6 597

+94 11 232 6 597

pmu@industry.gov.lk
pmu116mic@gmail.com

திரு.எம்.ஏ.என்.கே.மனிமேன்து

கருத்திட்ட மதிப்பீட்டு உத்தியோகத்தர்

+94 11 239 0 142

+94 11 243 6 662

pmu@industry.gov.lk
pmu116mic@gmail.com

திருமதி கேஷிக்கா ஜயசிங்க

சுற்றாடல் உத்தியோகத்தர் (கடமை நிறைவேற்றல்)

+94 11 239 0 142

+94 11 243 6 662

pmu@industry.gov.lk
pmu116mic@gmail.com