கைத்தொழில் மற்றும் கைத்தொழில் பேட்டை அபிவிருத்தி பிரிவூ
- மேலதிகச் செயலாள
- கைத்தொழில் மற்றும் கைத்தொழில் பேட்டை அபிவிருத்தி பிரிவூ
- கைத்தொழில்களைப் பதிவு செய்தல் பிரிவூ
கைத்தொழில்கள் மற்றும் கைத்தொழில் பேட்டைகள் அபிவிருத்தி பிரிவூ
எஸ்.ஏ. மஹிந்த லால் குணதிலக்க
மேலதிகச் செயலாள
கைத்தொழில்கள் மற்றும் கைத்தொழில் பேட்டைகள் அபிவிருத்தி
தொலைபேசி: 0112433725
உள்ளக : 244
தோலை நகல்: 011-2448462
மின்னஞ்சல் : adsec indev@industry.gov.lk
- கைத்தொழில்துறை அபிவிருத்திப் பிரிவில், அனைத்து பிராந்திய அலுவலகங்கள் மற்றும் கைத்தொழில்துறை அபிவிருத்தி நடவடிக்கைகளை வழிநடாத்தல், மேற்பார்வை மற்றும் தினசரி நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
- 1990 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க கைத்தொழில் மேம்பாட்டுச் சட்டத்துடன் தொடர்பான அனைத்துப் பணிகளையும் நிறைவேற்றுதல்.
- புதிய கைத்தொழிற் பேட்டைகளை அமைத்தல், உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல் மற்றும் தற்போதுள்ள கைத்தொழிற்பேட்டைகளின் வசதிகளை மேம்படுத்துதல்.
- கைத்தொழிற்பேட்டைகள் தொடர்பாக நிலவுகின்ற காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளல்.
- உள்ளூர் கைத்தொழிலதிபர்களுக்கு கைத்தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளல்.
- இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபையின் கீழ் கைத்தொழில் பேட்டைகளின் அபிவிருத்தி பணிகள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
கைத்தொழில் மற்றும் கைத்தொழில் பேட்டை அபிவிருத்தி பிரிவூ
தசுன் ராஜபக்ஷ
சேவை : இலங்கை நிர்வாக சேவை
பதவி : பணிப் பாளH
தொலைபேசி: 0112441490
உள்ளக : 352
மின்னஞ்சல் : idmic110@gmail.com
செயல்பாடுகள்
- கைத்தொழில்துறை அபிவிருத்திப் பிரிவில், அனைத்து பிராந்திய அலுவலகங்கள் மற்றும் கைத்தொழில்துறை அபிவிருத்தி நடவடிக்கைகளை வழிநடாத்தல், மேற்பார்வை மற்றும் தினசரி நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
- 1990 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க கைத்தொழில் மேம்பாட்டுச் சட்டத்துடன் தொடர்பான அனைத்துப் பணிகளையும் நிறைவேற்றுதல்.
- புதிய கைத்தொழிற் பேட்டைகளை அமைத்தல், உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல் மற்றும் தற்போதுள்ள கைத்தொழிற்பேட்டைகளின் வசதிகளை மேம்படுத்துதல்.
- கைத்தொழிற்பேட்டைகள் தொடர்பாக நிலவுகின்ற காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளல்..
- உள்ளூர் கைத்தொழிலதிபர்களுக்கு கைத்தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளல்
எஸ்.கே.காமிந்த கொடிகார
சேவை : இலங்கை திட்டமிடல் சேவை
பதவி : பிரதி பணிப்பாளH
தொலைபேசி: 0112343937
உள்ளக : 495
மின்னஞ்சல் : idmic110@gmail.com
செயல்பாடுகள்
- மேற்கு, ஊவா, சப்ரகமுவ, வடமேற்கு, வடமத்திய, வடக்கு, மத்திய, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள பிராந்திய கைத்தொழில் சேவை நிலையங்கள் தொடர்பான கடமைகள்.
- மேற்கு, ஊவா, சப்ரகமுவ, வடமேற்கு, வடமத்திய, வடக்கு, மத்திய, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள கைத்தொழிற்பேட்டைகள் தொடர்பான கடமைகளை மேற்கொள்ளல்.
- கைத்தொழில் அபிவிருத்திப் பிரிவு தொடர்பான திட்டங்களைத் தயாரித்தல், பின்தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளல், அதனுடன் தொடர்புடைய முன்னேற்ற மீளாய்வுக் கூட்டங்களை ஏற்பாடு செய்தல் மற்றும் முன்னேற்றத்தை அறிக்கைப்படுத்தல்.
- கைத்தொழில் பதிவுப் பிரிவு தொடர்பான அனைத்து கடமைகளையும் நிறைவேற்றுதல்.
- கைத்தொழில் அபிவிருத்திப் பிரிவு தொடர்பான நிர்வாக கடமைகளை நிறைவேற்றுதல்.
தேசா குமாரதாச
சேவை : இலங்கை பொறியியல் சேவை
பதவி : பிரதி பணிப்பாளH(பொறியியலாளர்)
தொலைபேசி: 0112-330578
உள்ளக : 354
மின்னஞ்சல் : idmic110@gmail.com
1990 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க கைத்தொழில் மேம்பாட்டுச் சட்டத்தின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துதல்.
புதிய கைத்தொழில் பேட்டைகளை அமைத்தல்.
கைத்தொழிற்பேட்டைகளுக்குரிய காணிகளில் வணிக ரீதியான உற்பத்திகளுக்கு பொருத்தமான முதலீட்டாளர்களைத் தேர்ந்தெடுத்தல் மற்றும் அவர்களுக்கு காணி ஒதுக்கீடு செய்தல். (அமைச்சரவை அங்கீகாரத்தின் கீழ்)
கைத்தொழிற்பேட்டைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல்.
- கருத்திட்டங்களை துரிதமாக செயற்படுத்துவதற்காக காணிகளை விடுவித்தலுடன் தொடர்பான சிக்கல்கள், சுற்றாடல் சார்ந்த அனுமதி, உள்ளூராட்சி நிறுவனங்களின் அங்கீகாரம் போன்ற நடவடிக்கைகளுக்கு வசதிகளை வழங்குதல்.
- தொழிற்பேட்டைகள் தொடர்பான பராமரிப்பு நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொள்ளும் நோக்கில் பிராந்திய சேவை குழுக்களை நியமித்தல் மற்றும் அனைத்து மாகாணங்களிலும் பிராந்திய கைத்தொழில் சேவை குழுக்களை அமைத்தல்.
- தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப பொருத்தமான பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்தி தொழிலதிபர்களுக்கு அறிவைப் பெற்றுக்கொடுத்தல்.
- கைத்தொழில்துறையினரின் பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பதற்குத் தேவையான வழிகாட்டல்கள், அரசு மற்றும் அரச சார்பற்ற நிறுவன ஒருங்கிணைப்பு, நடமாடும் சேவைகள் மற்றும் ஏனைய தேவையான ஒத்துழைப்பை வழங்குதல்.
- கைத்தொழில்துறையினருக்கு அவ்வப்போது அரசாங்கத்தினால் எடுக்கப்படுகின்ற தீர்மானங்களுக்கமைய வழங்கப்படுகின்ற அனுகூலங்களைப் பெற்றுக்கொள்வதற்கு அவர்களுக்கு வழிகாட்டல்.
கைத்தொழில்களைப் பதிவு செய்தல்
டீ. பீ. திவங்கா பிரேமரத்ன
சேவை : இலங்கை நிHவாக சேவை
பதவி : பிரதி பணிப்பாளH(கைத்தொழில்துறை அபிவிருத்தி), பதில் கடமை
தொலைபேசி: 011244 8 467
உள்ளக : 299
தோலை நகல்: 011254 2 708
மின்னஞ்சல் : industry.regist@gmail.com
ad_ir@industry.gov.lk
i. கைத்தொழில்களைப் பதிவு செய்தல்
1990 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க கைத்தொழில் மேம்பாட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் பிரகாரம் அனைத்து உற்பத்திக் கைத்தொழில் முனைவோரும் தனது உற்பத்தித் வேலைத் தளத்தை கைத்தொழில்துறை அமைச்சின் கீழ் பதிவு செய்ய வேண்டும். அதற்கமைய, நம் நாட்டில் நிலவுகின்ற அனைத்து உற்பத்திக் கைத்தொழில்களும், ஆரம்பிக்கப்பட்ட திகதி முதல் 03 மாத காலத்திற்குள் அந்த தொழில் முயற்சியை பேணி வருகின்ற வேலைத்தளம் அல்லது இடத்தை கைத்தொழில் பதிவாளரிடம் பதிவு செய்தல் வேண்டும் (இது முதலீட்டு சபை அனுமதிப்பத்திர உரிமையாளர்களுக்கு பொருந்தாது).
நாட்டில் உள்ள அனைத்து உற்பத்திக் கைத்தொழில்களையும் இந்த அமைச்சின் கீழ் பதிவு செய்வதே கைத்தொழில்களைப் பதிவு செய்தல் பிரிவின் முக்கிய நோக்கமாகும். அதற்கமைய, தகுதிவாய்ந்த கைத்தொழில்களுக்கு பதிவுச் சான்றிதழ் வழங்கப்படுவதுடன், அதன் மூலம் பதிவு செய்யப்பட்ட தொழில் முனைவோர் பலதரப்பட்ட நன்மைகளைப் பெற முடியும்.
இந்த அமைச்சில் பதிவு செய்வதன் மூலம் கைத்தொழில்துறை தொழில் முயற்சியளார்களுக்கு கிடைக்கும் நன்மைகள்;
1. அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தித் கைத்தொழில் முயற்சியாளராக இனங்கண்டுகொள்ளப்படல்.
2. அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன்கூடிய கைத்தொழிற்பேட்டைகளில் உள்ள காணிகளை நீண்ட கால நியாயமான குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்வதற்கான தகைமைகளைப் பெற்றுக்கொள்ளல்.
3. மதிப்பு சேர்க்கப்பட்டஉற்பத்திகளுக்கு வழங்கப்படும் தீர்வை வரிச் சலுகை முறையின் கீழ் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான ‘வற்’ வரி வசதிகளைப் பெற்றுக்கொள்ளல் தொடர்பான பரிந்துரைகளைப் பெற முடியுமாக இருத்தல்.
4. கைத்தொழில்துறையின் மேம்பாட்டிற்காக வெளிநாட்டு ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவைப்படும் வெளிநாட்டு நிபுணர்களுக்கு நாட்டினுள் நுழைவுக்கான மற்றும் வதிவிட வீசாவைப் பெற்றுக்கொள்ளல்.
5. வாகனங்கள் மற்றும் மின்சார துணைப் பாகங்களை ஒன்றுசேர்ப்பதன் மூலம் உள்ளூர் மதிப்பு சேர்க்கப்பட்ட உற்பத்திப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கான தீர்வை வரிச் சலுகைகளைப் பெற்றுக்கொள்வதற்கான தகைமைகளைப் பெற்றுக்கொள்ளல்.
6. உற்பத்திக் கைத்தொழிலாகப் பதிவுசெய்ததன் பின்னர் மாதாந்த மின்சாரக் கட்டணங்களுக்காக வழங்கப்படும் சலுகைக்குப் பதிலாக உரிமையைப் பெற்றுக்கொள்ள முடியுமாக இருத்தல்.
7. சர்வதேச தரப்படுத்தல் சான்றிதழ்களைப் பெறுவதற்கான பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமாக இருத்தல்.
8. சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிலாளர்களுக்கு அமைச்சினால் வழங்கப்படும் கடன் வசதிகளைப் பெறுவதற்கான தகுதியைப் பெற்றுக்கொள்ளல்.
i. சுழற்சி நிதியக் கடன் திட்டம் – (8% ஆண்டு வட்டியில் 25 மில்லியன் ரூபா வரை)
ii (6.5% ஆண்டு வட்டியில் 30 மில்லியன் ரூபா வரை)
9. கைத்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மீது கவனம் செலுத்தி, அவற்றுக்கான தீர்வுகளைக் கண்டறிவதற்கு அமைச்சின் உதவியைப் பெற்றுக்கொள்ள முடியுமாக இருத்தல்.
10. அவசர அனர்த்த நிலைமை ஏற்பட்டாலும் கைத்தொழில்களை தொடர்ந்து நடாத்துவதற்குத் தேவையான பரிந்துரைகளை குறித்த அரச நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கான தகைமைகளைப் பெற்றுக்கொள்ளல்.
ii. தற்காலிக பதிவு சான்றிதழ்களை புதுப்பித்தல்
iii. பதிவுச் சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ளல்
iv. அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்ட கைத்தொழில் நிறுவனங்களின் வருடாந்த உற்பத்தி அறிக்கைகளை சேகரித்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் தகவல்களை இற்றைப்படுத்தல்.
1990 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க கைத்தொழில்துறை மேம்பாட்டுச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின் (2) ஆம் உப பிரிவின் பிரகாரம், இந்த அமைச்சின் கீழ் பதிவுசெய்யப்பட்ட அனைத்துக் கைத்தொழில் நிறுவனமும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 ஆம் தேதிக்கு முன்னர் கைத்தொழில் அமைச்சுக்கு தனது கைத்தொழில் தொடர்பான தகவல்களை வழங்கக் கடமைப்பட்டுள்ளது. அந்த அறிக்கைகள் உதவிப் பணிப்பாளர், கைத்தொழில்கள் பதிவு செய்தல் பிரிவு, கைத்தொழில் அமைச்சு, இலக்கம் 73/1, காலி வீதி, கொழும்பு 03 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.