வருடங்களுக்கான தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கும் போட்டியை பாடசாலைகள், அரச, உற்பத்தி மற்றும் சேவை போன்ற பிரதான துறைகளின் கீழ் மீண்டும் நடாத்துவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.
கிளீன் ஸ்ரீலங்கா (Clean Sri Lanka) தேசிய திட்டத்தின் நோக்கத்தை அடைந்து கொள்வதற்கான கொள்வதற்கான உபாயமாக இந்தத் திட்டத்தை செயற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முன்மாதிரியான நிறுவனங்களை அடையாளம் காணுதல் மற்றும் தேசிய மட்டத்தில் மதிப்பிற்கு உள்ளான மற்றும் வளங்களைப் பாதுகாப்பதன் மூலம் நிலைபேறான வளர்ச்சிக்காக எதிர்கால உலக சவால்களுக்கு முகம் கொடுப்பதற்கு அரச நிறுவனங்களைத் தயார்படுத்துதல் போன்ற இலக்குகளுடன் 2003 ஆம் ஆண்டில் இந்த தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கும் போட்டி அறிவிக்கப்பட்டதுடன் 2020 ஆம் ஆண்டில் இருந்து இந்த போட்டி நடாத்தப்படவில்லை.