அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
அரச வர்த்தகப் பிரிவு
- இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபை
- தேசிய தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அதிகார சபை
- இலங்கை மட்பாண்டக் கைத்தொழில் கூட்டு சபை
- கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம்
ஒவ்வொரு பதவியுடன் தொடர்புடைய ஆட்சேர்ப்பு நடைமுறைகளின் மாதிரிகள் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் காணப்படுவதுடன் (https://www.treasury.gov.lk/web/department-of-management-services-links-applications) , அந்த மாதிரிக்கமைய தயாரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு நடைமுறைகளை அதனுடன் தொடர்புடைய ஏனைய தகவல்களுடன் அமைச்சின் செயலாளரின் பரிந்துரையுடன் அமைச்சினால் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
கைத்தொழில்களை பதிவு செய்தல் பிரிவு
- வியாபாரப் பதிவுச் சான்றிதழ் (BR / ROC Certificate)
- பணிப்பாளர் சபை பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்
- உரிமையாளர், பங்குதாரர்கள் அல்லது பணிப்பாளர் சபையின் அனைத்து உறுப்பினர்களின் தேசிய அடையாள அட்டைகள் அல்லது கடவுச்சீட்டுக்களின் போட்டோ பிரதிகள்
- வேலைத் தளம் அமைந்துள்ள காணி உறுதிப் பத்திரத்தின் பிரதி அல்லது குத்தகை ஒப்பந்தத்தின் பிரதியொன்று
- சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனுமதி
- ஊழியர் சேமலாப நிதிய சான்றிதழின் பிரதி (EPF / ETF)
- இயந்திர உபகரணங்களின் பட்டியல்
- உற்பத்தி செயல்முறையின் விளக்கப்படம்
- நிதி அறிக்கை
- நிறுவனத்தின் நிறுவனக் கட்டமைப்பு
- உற்பத்தியுடன் தொடர்பாக பின்வரும் நிறுவனங்களின் பரிந்துரை தேவை.
முடியாது. முதலீட்டு சபையின் பதிவை இரத்து செய்யப்பட்டதனை உறுதி செய்த பிறகு இந்த அமைச்சின் கீழ் பதிவு செய்துகொள்ள முடியும். (மேலதிக தகவலுக்கு உதவிப் பணிப்பாளரை தொடர்பு கொள்ளவும்)
உற்பத்தியுடன் தொடர்பான தேவையான ஆவணங்கள் சரியாக பூர்த்தி செய்யப்படாவிட்டால் ஒரு தற்காலிக பதிவு சான்றிதழ் வழங்கப்படுகிறது. தற்காலிக காலப் பகுதியினுள் தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்த பிறகு, MI/IR/05 விண்ணப்பத்துடன் சமர்ப்பிப்பதன் மூலம் நிரந்தர சான்றிதழைப் பெற்றுக்கொள்ள முடியும். (renewal pdf).
சேவைகளை மட்டுமே வழங்கும் நிறுவனங்களை கைத்தொழில் அமைச்சின் கீழ் பதிவு செய்ய முடியாது.
எந்தவொரு கட்டணமும் அறவிடப்படுவதில்லை.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 ஆம் தேதி ஆண்டு அறிக்கையை சமர்ப்பிக்க கடைசி தேதியாகும்.
(Annual return pdf) எனும் இடையிணைப்பி ஊடாக படிவத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் அல்லது அமைச்சுக்கு வருகைதந்து விண்ணப்பப் படிவங்களைப் பெற்று உதவிப் பணிப்பாளர், கைத்தொழில்கள் பதிவுப் பிரிவு, கைத்தொழில் அமைச்சு, இல. 73/1, காலி வீதி, கொழும்பு 03 என்ற முகவரிக்கு அனுப்பவும்.
கொள்கை மேம்பாட்டுப் பிரிவு
- எண்ணக்கருத்தியல் பத்திரம்
- கருத்திட்ட முன்மொழிவு செலவு மதிப்பீடு
- பட்டய கணக்காளர் ஒருவரால் சான்றளிக்கப்பட்ட உள்ளூர் பெறுமதி சேர்க்கப்பட்டு கணக்கிடப்பட்ட அறிக்கை
- வாகன சட்டகம் (Vehicle Body Shell) இறக்குமதிக்கான கோரிக்கை கடிதம்
- எண்ணக்கருத்தியல் பத்திரம்
- கருத்திட்ட முன்மொழிவு செலவு மதிப்பீடு
- பட்டய கணக்காளர் ஒருவரால் சான்றளிக்கப்பட்ட உள்ளூர் பெறுமதி சேர்க்கப்பட்டு கணக்கிடப்பட்ட அறிக்கை
கருத்திட்ட முகாமைத்துவப் பிரிவு
i. கைத்தொழில் அமைச்சில் அமைந்துள்ள கருத்திட்ட முகாமைத்துவப் பிரிவிலிருந்து
ii கைத்தொழில் அமைச்சின் அனைத்து பிராந்திய அலுவலகங்களிலிருந்து
iii அனைத்து பிரதேச செயலகங்களின் தொழில் முயற்சிகள் மேம்பாட்டு அலுவலர்களிடமிருந்து
iv. அனைத்து கடன் வழங்கும் நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் மற்றும் கிளை அலுவலகங்களிலிருந்து
SMILE III – RF இற்காக (10 நிறுவனங்கள்)
i. இலங்கை வங்கி (BOC)
ii மக்கள் வங்கி
iii. பிரதேச அபிவிருத்தி வங்கி (RDB)
iv. தேசிய அபிவிருத்தி வங்கி (NDB)
v. DFCC வங்கி
vi. சணச அபிவிருத்தி வங்கி (SDB)
vii. செலான் வங்கி
viii. கொமர்ஷல் வங்கி
ix. சம்பத் வங்கி
x. ஹற்றன் நெஷனல் வங்கி (HNB)
E-Friends II – RF இற்காக (11 நிறுவனங்கள்)
i. இலங்கை வங்கி (BOC)
ii மக்கள் வங்கி
iii. பிரதேச அபிவிருத்தி வங்கி (RDB)
iv. தேசிய அபிவிருத்தி வங்கி (NDB)
v. DFCC வங்கி
vi. செலான் வங்கி
vii. கொமர்ஷல் வங்கி
viii. சம்பத் வங்கி
ix. ஹற்றன் நெஷனல் வங்கி (HNB)
x. பீபல்ஸ் லீசிங் என்ட் பினேன்ஸ் பீஎல்சீ
xi. லங்கா ஒரிக்ஸ் லீசிங் பினேன்ஸ்(LOLC)
கைத்தொழில் அமைச்சிலுள்ள கருத்திட்ட முகாமைத்துவப் பிரிவுக்கு அல்லது அனைத்துக் கடன் வழங்கும் நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் அல்லது கிளை அலுவலகங்களுக்கு
படிமுறை 1
கடன் வழங்கும் நிறுவனங்கள் மூலம் கருத்திட்ட முகாமைத்துவப் பிரிவுக்கு கிடைக்கின்ற மற்றும் கருத்திட்ட முகாமைத்துவப் பிரிவுக்கு நேரடியாக கிடைக்கின்ற கடன் விண்ணப்பங்களை கருத்திட்ட செயற்பாட்டுக் குழுவிடம் முன்வைத்தல் (இங்கு கருத்திட்ட செயற்பாட்டு அறிவுறுத்தல்களுக்கமைய அந்தக் கோரிக்கைகள் தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்படுவதுடன், அந்தத் தீர்மானங்களை கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் நேரடியாக கடன் விண்ணப்பதாரர்களுக்கு அறிவிக்கப்படும்)
படிமுறை 2
படிமுறை 1 இன் கீழ், கடனைப் பெற்றுக்கொள்வதற்கான அடிப்படைத் தகைமைகளைப் பூர்த்தி செய்யும் கடன் விண்ணப்பதாரர்களின் மீள்நிதியளிப்பு விண்ணப்பங்கள் அதனுடன் தொடர்புடைய ஏனைய ஆவணங்களுடன் கடன் வழங்கும் நிறுவனங்களினால் / ஊடாக கருத்திட்ட முகாமைத்துவப் பிரிவுக்கு அனுப்பப்படுவதுடன், அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் கருத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு இங்கு மேற்கொள்ளப்படுகின்றது.
படிமுறை 3
படிமுறை 2 இன் கீழ் நிதி ஒதுக்கப்பட்ட கருத் திட்டங்களுக்கு கடன் வழங்கும் நிறுவனங்களால் கடன் விடுவிக்கப்பட்டதன் பின்னர், அந்த நிதியை மீள் நிரப்பல் செய்வதற்கான விண்ணப்பங்கள் அதனுடன் தொடர்புடைய ஏனைய ஆவணங்களுடன் கடன் வழங்கும் நிறுவனங்களினால் / ஊடாக கருத்திட்ட முகாமைத்துவப் பிரிவுக்கு அனுப்பப்படுவதுடன், அந்த விண்ணப்பங்களுக்கான நிதி கருத்திட்ட முகாமைத்துவப் பிரிவினால் திறைசேரி மற்றும் இலங்கை மத்திய வங்கி ஊடாக விடுவிக்கப்படும்.
SMILE III – RF கடன் திட்டத்தி்ற்காக
காணிகள் மற்றும் கட்டிடங்கள் தவிர, வர்த்தகத்திற்குச் சொந்தமான ஏனைய சொத்துகளின் புத்தக (ஏட்டு) பெறுமதி கருத்திட்டம் நிறைவடைந்ததன் பின்னர் ரூ. 150 மில்லியனுக்கும் குறைவான வர்த்தகங்களுக்காக.
E-Friends II – RF கடன் திட்டத்தி்ற்காக
காணிகள் மற்றும் கட்டிடங்கள் தவிர, வர்த்தகத்திற்குச் சொந்தமான ஏனைய சொத்துகளின் புத்தக (ஏட்டு) பெறுமதி கருத்திட்டம் நிறைவடைந்ததன் பின்னர் ரூ. 250 மில்லியனுக்கும் குறைவான வர்த்தகங்களுக்காக (உயர் சூழல் மாசடைவு ஏற்படுகின்ற கருத்திட்டங்களுக்கு ரூ.500 மில்லியன் வரை கவனத்திற்கொள்ளப்படும்
SMILE III - RF கடன் திட்டத்தின் கீழ் கடன்கள் வழங்கப்படும் கைத்தொழில் துறைகள்:
- தும்பு சார்ந்த உற்பத்திகள்
- இறப்பர் சார்ந்த உற்பத்திகள்
- பிளாஸ்டிக் சார்ந்த உற்பத்திகள்
- துணிமணிகள் மற்றும் ஆடை சார்ந்த உற்பத்திகள்
- உணவு பதப்படுத்துதல்/பானங்கள் மற்றும் புகையிலை சார்ந்த உற்பத்திகள்
- தோல் சார்ந்த உற்பத்திகள்
- அச்சிடல் / காகிதம் சார்ந்த உற்பத்திகள்
- மரக் குற்றிகள் சார்ந்த உற்பத்திகள்
- உலோகம் சார்ந்த உற்பத்திகள்
- கட்டிட பொருள் சார்ந்த உற்பத்திகள்
- இரசாயனப் பொருட்கள் சார்ந்த உற்பத்திகள்
- விவசாயம் சார்ந்த உற்பத்திகள்
- மீன்பிடிக் கைத்தொழில் சார்ந்த உற்பத்திகள்
- கால்நடை வளர்ப்பு/ பூ வளர்ப்பு/ நீர் வாழ் உயிரினங்கள் வளர்ப்பு
- ஏனைய உற்பத்திகள் (களிமண்/ பீங்கான்/ கண்ணாடி/ கைவினைப் பொருட்கள்/ மருந்துகள்/ நகைகள் போன்றவை)
- அடிப்படை சேவைகள் உற்பத்திக் கைத்தொழில்கள் (வாகன பழுதுபார்ப்பு போன்றவை)
இவ்வாறான கைத்தொழில்களின் இயந்திர சாதனங்களுக்கான தேவைப்பாடுகளுக்கு மற்றும் கருத்திட்ட செயற்பாட்டு அறிவுறுத்தல்களின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட தொழிற்பாட்டு மூலதனத் தேவைகளுக்காகவும் கடன்கள் வழங்கப்படுகின்றன.
E-Friends II – RF கடன் திட்டத்தின் கீழ் கடன்கள் வழங்கப்படும் கைத்தொழில் துறைகள்:
- மேலே SMILE III – RF கடன் திட்டத்தின் கீழ் கடன்கள் வழங்கப்படும் கைத்தொழில் துறைகள் உட்பட கைத்தொழில் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற ஏனைய கைத்தொழில் துறைகள்
- சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் உற்பத்திகளுக்கு பதிலாக மாற்று உற்பத்திகளை உற்பத்தி செய்கின்ற கைத்தொழில் துறைகள் (உதாரணம் - பிளாஸ்டிக் கொள்கலன்களுக்கு பதிலாக வாழைப்பழம் / பாக்கு போன்ற இயற்கை மூலப்பொருட்களை பயன்படுத்தி கொள்கலன்களை உற்பத்திசெய்தல்)
இவ்வாறான கைத்தொழில்களில் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், உயிர்வாயு ஜெனரேட்டர்கள், பெயிண்ட் கூடங்கள், வலுசக்தி சேமிப்பு இயந்திரங்கள் / உபகரணங்கள், வளி உமிழ்வு கட்டுப்பாட்டுக் கருவிகள், ஒலி மாசடைவு கட்டுப்பாட்டு கருவிகள் போன்றவற்றுக்கு கடன்கள் வழங்குகின்றன.
கவனிக்க - கடன் வழங்கப்படும் துறைகள் செயற்பாட்டுக் கொள்கைத் தீர்மானங்களுக்கமைய மாற்றமடையலாம்.
அபிவிருத்திப் பிரிவு III
இந்த அமைச்சின் இலக்கம்: MIC/SME/09/08/01 மற்றும் 2020.07.09 ஆம் தேதியிடப்பட்ட கடிதத்திற்கிணங்க, அலுமினியம் ட்ரொஸ் (Aluminium Dross), மில் ஸ்கேல் (Mill Scale), இரும்புத் தூள் (Metal Powder), துத்தநாகக் கசடு(Zink Slag) மற்றும் துத்தநாக சாம்பல் (Zink Ash) ஆகியவற்றின் ஏற்றுமதிக்கு அமைச்சரின் அங்கீகாரத்தின் கீழ் அங்கீகாரம் வழங்குவதற்கு முடியும்.
படிவ இலக்கம்: 3 (2)
படிவ இலக்கம்: 3 (3)
படிவ இலக்கம்: 3 (4)
படிவ இலக்கம்: 3 (5,6)
இலங்கை முதலீட்டுச் சபையில் (BOI) பதிவுசெய்யப்பட்ட கைத்தொழில்களுக்கு இந்த அமைச்சின் சேவைகளை வழங்க முடியாதென்பதோடு அதற்காக அந்த நிறுவனத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும்.
கைத்தொழில்கள் மற்றும் கைத்தொழில் பேட்டைகள் மேம்பாட்டுப் பிரிவு
விபரம்
- முதலீட்டாளரின் கோரிக்கையை சமர்ப்பித்தல்.
- பிராந்திய கைத்தொழில் சேவை நிலையத்தினால் பிராந்திய கைத்தொழில்துறை சேவை குழு பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்ளல்.
- பிராந்திய கைத்தொழில்துறை சேவைக் குழுவின் பரிந்துரைகளை அமைச்சின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்.
- அமைச்சின் மதிப்பீட்டுக் குழுவின் மதிப்பீட்டுக்குட்படுத்தல்.
- புதிய கருத்திட்டத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளல்.
- அமைச்சரவை அங்கீகாரத்தை முதலீட்டாளர்களுக்கு அறிவித்தல்.
- காணியை முறையாக ஒதுக்கிக்கொள்வதற்காக முதலீட்டாளர் அமைச்சுக்கு வைப்புத் தொகையொன்றைச் செலுத்த வேண்டுமென்பதோடு அந்தப் பற்றுச்சீட்டுடன் பின்வரும் ஆவணங்களையும் அமைச்சுக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.
- செயல் திட்டம்
- காணியின் நில அளவைத் திட்டம் - ஒரு தனியார் நில அளவையாளர் ஊடாக தயாரித்துக்கொள்ளல் போதுமானதாகும்.
- கைத்தொழில் உற்பத்தியைத் தொடங்கியதன் பின்னர் நீண்ட கால குத்தகை அடிப்படையில் (35 ஆண்டுகள்) குத்தகை உரித்துச்சான்றிதழை வழங்குவதற்கான பரிந்துரைக் கடிதம்
தேவையான ஆவணங்கள்
- கருத்திட்ட முன்மொழிவுகள் - பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். இடையிணைப்பி
- வியாபாரப் பதிவுச் சான்றிதழ்
- சுற்றுச்சூழல் தாக்கம் பற்றிய பரிந்துரை
- வருமான வரி செலுத்தல் பற்றிய விபரம்
- ஊழியர் சேமலாப நிதிய (EPF) சான்றிதழ்
35 ஆண்டுகள்
- 35 வருடங்களுக்கான நீண்ட கால குத்தகை அடிப்படையில் காணியை வழங்குதல் மற்றும் குத்தகை செலுத்துவதற்கு ஐந்தாண்டு சலுகைக் கால அவகாசம் வழங்குதல்.
- கைத்தொழிற்பேட்டையில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல்.
- பாதுகாப்பு சேவைகளை வழங்குதல்.
- புதிய கைத்தொழில்களை ஆரம்பிப்பதற்குத் தேவையான அங்கீகாரங்களைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான உதவிகளை வழங்குதல்.